UPDATED : அக் 10, 2026 04:41 PM
ADDED : அக் 10, 2026 04:36 PM
கட்டுமான தொழில்
‘பேர்பில்ட் 2026’ — கட்டுமான நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் நேரடி சந்திப்பு
கிரெடாய் தமிழ்நாடு நடத்தும் 5-வது ‘ஸ்டேட்கான்’ மாநாட்டுடன், முதல் முறையாக ‘பேர்பில்ட் 2026’ கட்டுமான மற்றும் கட்டிடப் பொருட்கள் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. கட்டுமான நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒரே இடத்தில் இணைப்பதே இதன் நோக்கம்.
என்ன பார்க்கலாம்?
- கட்டுமானப் பொருட்கள் மற்றும் புதிய தயாரிப்புகள்
- புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள்
- செயற்கை நுண்ணறிவு, ப்ராப்டெக், ரோபோடிக்ஸ் பயன்பாடுகள்
- திட்டங்களுக்கு தேவையான புதிய கொள்முதல் தீர்வுகள்
யாருக்கு பயன்படும்?
- ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
- கட்டுமான நிறுவனங்கள்
- கட்டிடக் கலைஞர்கள்
- கொள்முதல் குழுக்கள்
- உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்
என்ன பயன்?
- புதிய சப்ளையர்களை நேரடியாக சந்திக்கலாம்
- பொருட்கள் மற்றும் சேவைகளை ஒப்பிடலாம்
- புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்
- வரவிருக்கும் திட்டங்களுக்கு வணிக தொடர்புகளை உருவாக்கலாம்
