ADDED : பிப் 23, 2026 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ்கோயல், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 7 புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதனை, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்ட மைப்பு (பியோ) வரவேற்று உ ள்ளது.
இதுகுறித்து பியோ தலைவர் ரால்ஹான் அறிக்கை:
இந்த முயற்சி, எம்.எஸ்.எம்.இ.,களின் போட்டித்தன்மையை மேம்படுத்தும். இந்தியாவின் உலகளாவிய சந்தை இருப்பை விரிவுபடுத்தும். அதிக கடன், வர்த்தக நிதி அணுகலில் கட்டுப்பாடு, தளவாட போதாமை, தகவல் இடைவெளி போன்ற எம்.எஸ். எம்.இ., வளர்ச்சிக்கான தடை களை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். 2.75 சதவீதம் வட்டி மானியம் உள்ளிட்டவை பெரிய ஆர்டர் களைப் பெற, ஏற்றுமதி யா ளர்களை ஊக்குவிக்கும்.

