தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிலக்கடலை ஏற்றுமதி தரத்தை சோதிக்க ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டும்: ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

 நிலக்கடலை ஏற்றுமதி தரத்தை சோதிக்க ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டும்: ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

 நிலக்கடலை ஏற்றுமதி தரத்தை சோதிக்க ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டும்: ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 16, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 07:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நிலக்கடலை ஏற்றுமதி செய்வதற்கு அப்லாடாக்சின் பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட டெஸ்டிங் லேப்களின் கட்டணத்தில் வெளிப்படை தன்மையையும், அவற்றின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன் கூறியதாவது:

இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் நிலக்கடலை ஏற்றுமதியாகிறது.

மலேசியாவுக்கு தமிழகத்திலிருந்து அதிகளவு நிலக்கடலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிலக்கடலை ஏற்றுமதிக்கு முன், அதில் பூஞ்சை தாக்குதல் உள்ளதா என்பதை அறிய அப்லடாக்சின் பரிசோதனை கட்டாயம்.

இந்த பரிசோதனை செய்திருந்தால் மட்டுமே 'அபெடா' என்றழைக்கப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி அமைப்பு தடையில்லா சான்று வழங்கும்.

தமிழகத்தில் அபெடாவால் பரிந்துரைக்கப்பட்ட 11 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் 7 நிலையங்களே சென்னையில் உள்ளன. இதில் பெரும்பான்மையான லேப்கள் குறித்து ஏற்றுமதியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த லேப்களில் பரிசோதனைக்கு கொடுத்தால் 3 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது. அவசரம் என்று கேட்டால் தொகையை உயர்த்தி விடுகின்றனர்.

டெஸ்டிங் லேப்களில் கட்டணம் குறித்த வெளிப்படை தன்மையும், எத்தனை நாட்களில் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் என்ற தெளிவும் இல்லை.

இதனால் டெஸ்டிங் லேப்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்தால் வேளாண் ஏற்றுமதி இன்னும் வளரும்.

இவ்வாறு கூறினார்.

 ஆண்டுக்கு 7 லட்சம் டன் நிலக்கடலை ஏற்றுமதி செய்து நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது

 தமிழகத்தில் உள்ள 11 பரிசோதனை நிறுவனங்களில் சான்று பெற 5 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us