sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 ஸ்பெயினுக்கு ஏற்றுமதி 56 சதவீதம் அதிகரிப்பு

/

 ஸ்பெயினுக்கு ஏற்றுமதி 56 சதவீதம் அதிகரிப்பு

 ஸ்பெயினுக்கு ஏற்றுமதி 56 சதவீதம் அதிகரிப்பு

 ஸ்பெயினுக்கு ஏற்றுமதி 56 சதவீதம் அதிகரிப்பு


UPDATED : ஜன 12, 2026 02:28 AM

ADDED : ஜன 12, 2026 02:27 AM

Google News

UPDATED : ஜன 12, 2026 02:28 AM ADDED : ஜன 12, 2026 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், ஸ்பெயினுக்கு ஏற்றுமதி 56 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், போலந்து ஆகிய நாடுகள் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மையங்களாக உருவெடுத்து வருகின்றன.

குறிப்பாக, ஸ்பெயினுக்கான இந்திய ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் 56 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதியில் ஸ்பெயினின் பங்கு 0.5 சதவீதம் உயர்ந்து, 2.4 சதவீதமாக ஆகியுள்ளது.

இதே போன்று, ஜெர்மனிக்கான ஏற்றுமதி, 9.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் ஜெர்மனியின் பங்கு 2.6 சதவீதம் ஆகும்.

Image 1520446


இதே காலகட்டத்தில் போலந்துக்கான இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி, 7.6 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், பெல்ஜியத்துக்கான ஏற்றுமதி, 4.76 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. ஒப்பந்தம் இறுதியாகும்பட்சத்தில், இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள், மருந்துப் பொருட்கள், ஸ்டீல், பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us