UPDATED : மார் 07, 2026 02:37 AM
ADDED : மார் 07, 2026 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த மாதம் உள்நாட்டு வாகன விற்பனை 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வாகன முகவர்களின் சங்கமான 'படா' தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் வலுவான வளர்ச்சி கண்டுள்ளதாகவும், விலை குறைப்பு, சந்தை நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்., மாதத்தில் மின் வாகனங்களின் விற்பனையும் 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

