தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ உரங்கள் விலை உயர்வு அதிகரிக்கிறது மானிய சுமை

 உரங்கள் விலை உயர்வு அதிகரிக்கிறது மானிய சுமை

 உரங்கள் விலை உயர்வு அதிகரிக்கிறது மானிய சுமை


ADDED : ஜூன் 14, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சர்வதேச சந்தையில் யூரியா விலை கடந்த ஓராண்டில் சராசரியாக 141 சதவீதம் உயர்ந்துள்ளதால், மத்திய அரசுக்கு உர மானிய சுமை கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்காசிய போர் மற்றும் உலகளாவிய வினியோக தடங்கல்களால் யூரியா, டி.ஏ.பி., மற்றும் பாஸ்போரிக் அமிலம் போன்ற முக்கிய உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் தாக்கம் இந்தியாவின் உர இறக்குமதி செலவிலும் பிரதிபலித்துள்ளது.

எனவே, நடப்பு 2026 - 27 நிதியாண்டிற்கான உர மானியத்தை கணக்கிடுவதில் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசின் உர மானிய செலவு, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட யூரியா இறக்குமதி டெண்டரில் விலைகள் கணிசமாக குறைந்திருப்பது, எதிர்காலத்தில் மானிய சுமையை ஓரளவு குறைக்க உதவக்கூடும்; ஆனால், அது எந்த அளவுக்கு இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us