தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/உரங்கள் கையிருப்பு 26 சதவீதம் அதிகரிப்பு

உரங்கள் கையிருப்பு 26 சதவீதம் அதிகரிப்பு

உரங்கள் கையிருப்பு 26 சதவீதம் அதிகரிப்பு


UPDATED : மார் 15, 2026 01:53 AM

ADDED : மார் 15, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2026 01:53 AM ADDED : மார் 15, 2026 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:நாட்டின் உரங்கள் கையிருப்பு 163 லட்சம் டன்னாக, அதாவது 26 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் உர மானியத்துக்காக கூடுதலாக 19,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

நாட்டின் உரங்கள் இருப்பு முந்தைய ஆண்டில் 128 லட்சம் டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டு 163 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் திட்டமிடுதலே இதற்கு காரணம். இதனால் விவசாயத்துக்கு தேவையான உர இருப்பை உறுதி செய்திருக்கிறோம். நடப்பு கரீப் சீசனுக்கான உரங்கள் போதுமான அளவில் உள்ளன.

உர மானியத்துக்காக கூடுதலாக 19,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பட்ஜெட்டில் மதிப்பிட்டதை விட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாடு முழுதுமுள்ள விவசாயிகளுக்கு போதுமான உர வினியோகத்தை உறுதி செய்திருக்கிறோம்.

Image 1548949

உர இருப்பு

2025

128 லட்சம் டன்

2026

163 லட்சம் டன்

26 சதவீதம்

யூரியா உற்பத்தி

2014 - -15ல்

225 லட்சம் டன்

2024 - -25ல்

306 லட்சம் டன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us