உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 22, 2026 01:58 AM

அ நிறம் | அளவு
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ஏப்ரல் முதல் இரண்டு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 18,000 கோடி ரூபாய் (2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான முதலீட்டை அவர்கள் திரும்ப பெற்றுள்ளதாக என்.எஸ்.டி.எல்., தரவுகள் கூறுகின்றன.
இதில் வங்கி மற்றும் நிதித்துறை பங்குகள் தான் அதிகளவில் விற்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறின. ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் காரணமாக, குறுகிய காலத்தில் வங்கி பங்குகள் மீது அழுத்தம் நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேநேரம், உள்நாட்டு முதலீட்டாளர்கள், வங்கி பங்குகள் தற்போது குறைந்த விலையில் இருப்பதாக கருதி முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.
