ADDED : ஆக 28, 2025 01:14 AM

இ ந்திய பொருட்களின் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, நாட்டின் பொருளாதாரத்துக்கு சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரி விதிப்பின் உடனடி தாக்கம் பெரிதாக இல்லாதது போல் தெரிந்தாலும், இதனால் ஏற்படும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை விளைவுகளை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சு முக்கியத்துவம் பெறுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரி விதிப்பால் ஏற்படும் வேலை இழப்பு, பணவீக்கம் உள்ளிட்ட மறைமுக பாதிப்புகளே, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை விளைவுகள் என்று கூறப்படுகிறது. அமைச்சகத்தின் இந்த அறிக்கை, அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சை இந்தியா தொடர விரும்புவதையே வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.