ADDED : ஏப் 24, 2025 11:35 PM

புதுடில்லி:கர்நாடகாவின் கைகாவில், புதிதாக 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் உலைகளை அமைப்பதற்காக, இந்திய அணுசக்தி கழகத்திடம் இருந்து 12,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை, மேகா இன்ஜினியரிங் அண்டு இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனம் பெற்றுள்ளது.
இது குறித்து, ஹைதராபாதை தலைமையிடமாக கொண்ட மேகா இன்ஜினியரிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய அணுசக்தி கழகத்திடம் இருந்து, இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆர்டரை பெற்றுள்ளோம்.
முதன்முறையாக என்.பி.சி.ஐ.எல்., தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தேர்வு முறையை பயன்படுத்தி, எங்களுக்கு இந்த திட்டத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
முன்னணி நிறுவனங்களான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், எல் அண்டு டி., ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, தொழில்நுட்ப அணுகுமுறை, சரியான விலை அடிப்படையில் தேர்வாகி உள்ளோம்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.
ரூ.12,800 கோடிக்கு மேகா இன்ஜினியரிங் ஆர்டர் பெற்றது