ADDED : அக் 01, 2026 06:56 AM

சென்னை: கடந்த ஏப்ரலில் டன் 14,000 ரூபாய்க்கு விற்பனையான தவிடு தற்போது 26,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால், கால்நடை தீவன உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கால்நடை தீவன உற்பத்தியில் அரிசி தவிடு, மக் காச்சோளம், சோயா, மொலாசஸ் ஆகியவை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன.
இதில் அரிசி தவிட்டின் விலை கடந்த ஏப்., மாதத்தில் 1 டன் 14,000 ரூபாய்க்கு விற்பனை யான நிலையில் தற்போது 26,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழக அரசிடம் அரிசி கையிருப்பு போதுமா னதாக உள்ளதால் புதிதாக நெல்லை அரைப்பதற்கான ஒதுக்கீடு வழங்கவில்லை. இதனால் தவிடுக்கு தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. அதேபோல் வறட்சியால் கர்நாடகாவிலிருந்து மக்காச்சோள வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உற்பத்தியாகும் 35 லட்சம் டன் மக்காச்சோளத்தில் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்காச்சோளத்தின் விலை குறையாமல் உயர்விலேயே உள்ளது.
மழையின்மையால் தமிழகத்தில் வெள்ளைச்சோளம் சாகுபடியும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி மூலப்பொருட்களின் விலையுயர்வு மற்றும் பற்றாக்குறையால் கால்நடை தீவன உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளது. இவ்வாறு கூறினர்.
