தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ துாத்துக்குடி துறைமுகத்தில் இலவச சரக்கு சேமிப்பு வசதி

 துாத்துக்குடி துறைமுகத்தில் இலவச சரக்கு சேமிப்பு வசதி

 துாத்துக்குடி துறைமுகத்தில் இலவச சரக்கு சேமிப்பு வசதி


ADDED : செப் 26, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், நேரடி சரக்கு பெட்டக கப்பல் சேவைக்கு சரக்குகளை சேமிக்க இலவச வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அத்துறைமுக ஆணைய தலைவர் சுசாசந்தகுமார் புரோஹித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: துறை முகத்தின் வாயிலாக சரக்கு பெட்டக போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சரக்கு சேமிப்பிற்காக 7வது சரக்குதளத்தில் 20,000 ச.மீ., பரப்பளவும், 10வது சரக்கு தளம் அருகில் 20,000 ச.மீ., பரப்பளவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைகள் வாயிலாக கையாளப்படும் கன்டெய்னர் பெட்டிகளுக்கு 10 நாட்கள் இலவச சேமிப்பு காலம் வழங்கப்படும். அதன் பின், துறைமுக ஆணையத்தின் நடைமுறையில் உள்ள கட்டண கட்டணங்கள் விதிக்கப்படும். இது, நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைக்கு மட்டும் பொருந்தும். இந்த நடவடிக்கை வரும் மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

துறைமுகத்தில் கூடுதலாக சரக்கு சேமிப்பு இடவசதியை ஏற்படுத்துவதுடன், இலவசமாக சேமிப்பு கால வரம்பையும் நீட்டிப்பதன் வாயிலாக துறைமுகம் வழியாக நேரடி சரக்கு கப்பல் போக்குவ ரத்து சேவைகளில் கையாளப்படும் கன்டெய்னர் பெட்டிகளை சேமிப்பதற்கு மேலும் வசதிகள் செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us