நிறுவனங்களுக்கு எரிவாயு விலை அதானி 'டோட்டல் காஸ்' அதிகரிப்பு
நிறுவனங்களுக்கு எரிவாயு விலை அதானி 'டோட்டல் காஸ்' அதிகரிப்பு
ADDED : மார் 06, 2026 01:29 AM

புதுடில்லி: ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலியாக, நிறுவன வாடிக்கையாளர்களுக்கான திரவ வடிவ இயற்கை எரிவாயுவின் விலையை அதானி 'டோட்டல் காஸ்' நிறுவனம் உயர்த்தி உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:
தற்போது புவி அரசியல் சூழல்கள் மோசமடைந்துள்ளன. இதன் விளைவாக, திரவ வடிவ இயற்கை எரிவாயு சப்ளை செய்யப்படும் வழித்தடமும் பாதிக்கப்பட்டுள்ளது. வினியோகஸ்தர்கள் வாயிலாக எங்களுக்கு கிடைக்கும் எரிவாயு குறைந்துள்ளது. இதனால் செயல்பாட்டில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு அது தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலால், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் எதிர்தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஓமன் மற்றும் ஈரான் இடையே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் நுகர்வில் 5ல் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே பயணிக்கும் நிலையில், பல நாடுகள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன.
இதனையடுத்து, அதானி டோட்டல் காஸ் நிறுவனம், நிறுவன வாடிக்கையாளர்களுக்கான எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.

