தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/இந்தாண்டுக்குள் ஜெம் போர்ட்டல் நவீனமயமாக்கப்படும்

இந்தாண்டுக்குள் ஜெம் போர்ட்டல் நவீனமயமாக்கப்படும்

இந்தாண்டுக்குள் ஜெம் போர்ட்டல் நவீனமயமாக்கப்படும்


UPDATED : பிப் 09, 2026 06:26 AM

ADDED : பிப் 09, 2026 02:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2026 06:26 AM ADDED : பிப் 09, 2026 02:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் தளம், அதிக தரவுகளை கையாளும் வகையில், எதிர்காலத்துக்கு ஏற்ப, இந்தாண்டுக்குள் நவீனமயமாக்கப்படும் என அதன் தலைமை செயல் அதிகாரி மிஹிர் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது: பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் வாயிலாக நேரடியாக நிறுவனங்களிடம் இருந்து வெளிப்படையாக வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஜெம் போர்ட்டல் தளம், ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஜெம் போர்ட்டலில் விற்பது, வாங்குவதை எளிமைப்படுத்த செய்ய வேண்டியது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஜெம் போர்ட்டல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 17.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வாயிலாக, இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொருள்கள், சேவைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us