sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம்: இறக்குமதியை அனுமதிக்க கோரிக்கை

மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம்: இறக்குமதியை அனுமதிக்க கோரிக்கை

மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம்: இறக்குமதியை அனுமதிக்க கோரிக்கை


UPDATED : நவ 28, 2025 10:24 AM

ADDED : நவ 27, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2025 10:24 AM ADDED : நவ 27, 2025 11:48 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹைதராபாத்: மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள இறக்குமதியை அனுமதிக்குமாறு, மத்திய அரசிடம் கோழிப்பண்ணையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹைதராபாதில் நடைபெற்று வரும் 17வது இந்திய கோழிப்பண்ணை கண்காட்சியில் அத்துறையினர் தெரிவித்ததாவது: கோழிப்பண்ணை தொழிலுக்கு மக்காச்சோளமும், சோயாவும் முக்கியமான மூலப்பொருட்கள். அதேபோல, எத்தனால் தயாரிப்புக்கும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில், ஆண்டுக்கு 4.20 கோடி டன் மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. இதில் எத்தனால் தயாரிப்பு துறைக்கு மட்டும் 1.20 - 1.50 கோடி டன் அளவுக்கு தேவை இருக்கிறது. கோழிப்பண்ணை துறையின் தேவை 2.50 கோடி டன்.

எத்தனால் உற்பத்தி துறையின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதால், மக்காச்சோளத்தின் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. கோழித்தீவன உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது.

* கோழிப்பண்ணை துறையில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
* கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள துறையில் ஏற்றுமதி குறைவு.
* வெளிநாடுகளில் ரோடு ஷோ நடத்தி ஏற்றுமதி வளர்ச்சிக்காண அரசின் உதவி தேவை.



இதன் விளைவாக சர்வதேச சந்தையில் பிரேசில், தாய்லாந்து போன்ற நாட்டுத் தயாரிப்புகளுடன் நம்மால் போட்டியிட முடிவதில்லை. இந்த பிரச்னையை சமாளிக்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோள இறக்குமதியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அவ்வாறு கிடைத்தால் சப்ளை பிரச்னை சரியாவதுடன் விலை நிலவரமும் சமன் அடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us