தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘நோ’ சொல்ல பழகுங்க மாணவர்களே!

‘நோ’ சொல்ல பழகுங்க மாணவர்களே!

‘நோ’ சொல்ல பழகுங்க மாணவர்களே!


UPDATED : அக் 13, 2026 02:08 PM

ADDED : அக் 13, 2026 02:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 02:08 PM ADDED : அக் 13, 2026 02:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் மாணவர்கள் சந்திக்கும் மிக முக்கியமான சவால், பிறருக்கு 'நோ' சொல்ல முடியாமல் திணறுவது.

நண்பர்களின் வற்புறுத்தல், வீட்டுப்பாடங்களை நகலெடுக்கத் தரும்படி கேட்பது, படிப்பை விட்டுவிட்டு அரட்டையடிக்க அழைப்பது எனப் பல சூழல்களில் என்ன செய்வதென்று தெரியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். தங்களின் நேரம், ஆற்றல் மற்றும் மன அமைதியைப் பாதுகாக்க ஒவ்வொரு மாணவனுக்கும் தனக்கான எல்லைகளை வகுத்துக்கொள்ளும் திறன் மிக அவசியம்.

நண்பர்கள் மத்தியில் எல்லைகளை அமைப்பது பல மாணவர்களுக்குக் கடினமாகத் தோன்றலாம். 'மறுத்தால் நட்பு முறிந்துவிடுமோ' என்ற பயமே இதற்கு முக்கியக் காரணம். ஆனால், உண்மையான நட்பு எப்போதுமே ஒருவரின் தனிப்பட்ட எல்லைகளை மதிக்கும். வீட்டுப்பாடங்களை அப்படியே காப்பியடிக்கத் தருமாறு கேட்பது, பிடிக்காத காரியங்களைச் செய்ய வற்புறுத்துவது போன்ற நேரங்களில் பக்குவமாகவும் உறுதியாகவும் மறுக்கப் பழக வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, தேர்வு நேரங்களிலும் அன்றாடப் படிப்பு வேளையிலும் முறையான திட்டமிடலும் எல்லைகளும் தேவை. படிக்கும் நேரத்தில் தேவையின்றி போனில் பேசுவதையோ அல்லது மற்ற வேலைகளில் கவனம் சிதறுவதையோ தவிர்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கிவிட்டால், அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதை நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அமைதியான முறையில் தெரியப்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

டிஜிட்டல் எல்லைகள்



சமூக ஊடகங்களும், மொபைல் போன்களும் மாணவர்களின் பெரும் நேரத்தை வீணடிக்கின்றன. இதற்கு டிஜிட்டல் எல்லைகள் அமைப்பது மிகவும் அவசியமாகிறது. படிக்கும் போதும், உணவு உண்ணும் போதும் மற்றும் தூங்குவதற்கு முன்பும் செல்போனைத் தள்ளி வைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வரும் ஒவ்வொரு செய்திக்கும் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

எல்லைகளை வகுப்பதில் மிக முக்கியமானது முறையான தகவல் தொடர்பு. கோபமாகவோ, சண்டையிடும் தோரணையிலோ பேசாமல், அமைதியாகவும் தெளிவாகவும் நம்முடைய தேவையை எடுத்துரைக்க வேண்டும். 'இப்போது என்னால் வர முடியாது, படித்து முடித்த பிறகு பேசுகிறேன்' என்பது போன்ற எளிய, நேரடியான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். தேவையின்றி நீண்ட விளக்கம் கொடுத்து குற்ற உணர்ச்சி அடைய வேண்டிய அவசியமில்லை.

முதலில் 'நோ' சொல்லும் போது கொஞ்சம் பயமும் தயக்கமும் இருக்கத்தான் செய்யும். ஆனால், நம் நேரமும் எதிர்காலமும் நம் கையில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, நமக்குரிய எல்லைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us