தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/தங்க பத்திர வெளியீடு 12ம் தேதி துவங்குகிறது

தங்க பத்திர வெளியீடு 12ம் தேதி துவங்குகிறது

தங்க பத்திர வெளியீடு 12ம் தேதி துவங்குகிறது


ADDED : பிப் 07, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான நான்காம் கட்ட தங்கப் பத்திரங்கள், இம்மாதம் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை வெளியிடப்படவுள்ளது. மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது.

தங்கப் பத்திரங்களை, மத்திய அரசின் சார்பில், ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம்.

நான்காம் கட்ட வெளியீடு@

@

ஒரு கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டில், கடந்தாண்டு ஜூன் மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை முதல்கட்ட தங்கப் பத்திரங்களும்; செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை, இரண்டாம் கட்ட தங்கப் பத்திரங்களும்; டிசம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்றாம் கட்ட தங்கப் பத்திரங்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை, நான்காம் கட்ட தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன.

ஒவ்வொரு முறையும், தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படுவதற்கு முந்தைய வாரத்தின் கடைசி மூன்று நாட்களின் 24 காரட் தங்கத்தின் சராசரி விலையே, தங்கப் பத்திரத்தின் விலையாக நிர்ணயிக்கப்படுகிறது.

நான்காம் கட்ட தங்க பத்திர வெளியீட்டுக்கு, ரிசர்வ் வங்கி விரைவில் விலை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடும்.

இருமுறை வட்டி


பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள், தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை வாயிலாக இந்த தங்கப் பத்திரங்களில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக வாங்கும்பட்சத்தில், கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும், 2.50 சதவிகிதம் என்ற நிலையான விகிதத்தில், ஆண்டுக்கு இருமுறை வட்டி வழங்கப்படும்.

அதிகபட்சமாக ஒரு தனிநபர், ஆண்டு ஒன்றுக்கு 4 கிலோ வரையிலும், அறக்கட்டளைகள் போன்ற அமைப்புகள் 20 கிலோ வரையிலும் முதலீடு செய்யலாம்.

தங்கப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் எட்டு ஆண்டுகள். எனினும், ஐந்து ஆண்டுகள் முடிந்த பின், முதிர்வுக்கு முன்னதாக, முதலீட்டை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us