ADDED : ஆக 18, 2026 03:45 AM

புதுடில்லி: புதிய உரிம விதிமுறைகளால் ஏற்பட்ட நிர்வாக சிக்கல்களுக்கு இடையிலும், இந்தியாவில் வெள்ளி இறக்குமதி மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
அன்னிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த மே மாதம் வெள்ளி இறக்குமதிக்கு உரிமம் பெறும் முறையை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, இறக்குமதி கணிசமாக சரிந்தது. இருந்தாலும், சர்வதேச விலையை விட உள்நாட்டில் வெள்ளிக்கு அதிக விலை கிடைப்பதால், வர்த்தகர்கள் அதன் இறக்குமதியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதன் விளைவாக, புதிய உரிம முறையின் கீழ் பல வர்த்தகர்கள் மற்றும் வங்கிகள் வெள்ளி இறக்குமதிக்கான உரிமங்களை பெற்றுள்ளதால், வெள்ளி இறக்குமதி மீண்டும் அதிகரித்துள்ளது. குஜராத்தின் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமான கிப்ட் சிட்டியில் செயல்படும் இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் வாயிலாக, ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 89.81 டன் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக இறக்குமதி இல்லாத நிலையில், தற்போது அங்கு மீண்டும் வெள்ளி இறக்குமதி தொடங்கியுள்ளது. இருப்பினும், சில வர்த்தகர்களால் தேவையான ஆவணங்களை உரிய நேரத்தில் பெற முடியாததால், இறக்குமதி முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பண்டிகை காலம் ஆண்டின் பிற்பகுதியில் பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்க உள்ளதால், நகை விற்பனையாளர்கள் தங்களது வெள்ளி கையிருப்பை அதிகரிக்க தொடங்கலாம். - ரெனிஷா சைனானி, தலைமை ஆய்வு அதிகாரி, ஆக்மாண்டு என்டர்பிரைஸ் 400 டன்னுக்கு உரிமங்கள் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வெள்ளி கிடைப்பது அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 400 டன் வெள்ளி இறக்குமதிக்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. - ஹர்ஷல் பரோட், முதன்மை ஆலோசகர், மெட்டல்ஸ் போகஸ்
