ஆன்லைனில் வெடிபொருளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை
ஆன்லைனில் வெடிபொருளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை
ADDED : மே 27, 2026 11:09 PM

புதுடில்லி: ஆபத்தான வெடிபொருட்களை ஆன்லைனில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி விற்பனை செய்த நிறுவனங்கள் மீது, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
அவ்வமைப்பின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாட்டிலுள்ள இ-காமர்ஸ் நிறுவனங்கள், எவ்விதமான பரிசோதனை மற்றும் பாதுகாப்பும் இன்றி, சட்டவிரோதமாக வெடிபொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் ரசாயனங்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றுக்கான விளம்பரங்களையும் வெளியிடுகின்றன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில், ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ள இப்பொருட்கள் பலவும், வெவ்வேறு சட்டங்களின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டவையாகவோ அல்லது தடை செய்யப்பட்டவையாகவோ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
