கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்பம் 'ஸ்டார்ட்அப்'கள் பெற அரசு உதவி
கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்பம் 'ஸ்டார்ட்அப்'கள் பெற அரசு உதவி
ADDED : ஜன 02, 2026 01:02 AM

சென்னை:கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ள புத்தாக்க தொழில்நுட்பங்களை, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் வாங்குவதற்கு, தமிழக அரசு, 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம், 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவும் வகையிலான உழவு இயந்திரங்கள், மின்சாரத்தை சேமிக்கும் தொழில்நுட்பம் என, பல்வேறு புதிய புத்தாக்கங்களை தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலர் உருவாக்குகின்றனர்.
அதேசமயம், பல கல்வி நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களை தயாரிப்புகளாக மாற்றி, சந்தைப்படுத்தாமல் உள்ளன. தற்போது, தகவல் தொழில்நுட்பம், ஆன்லைன் வணிகம், விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில், புத்தொழில் நிறுவனங்களை இளைஞர்கள் துவக்கி வருகின்றனர். அவர்களுக்கு, புதிய தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.
எனவே, கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் புத்தாக்க தீர்வுகளை செயல்முறைப்படுத்த, அதை வாங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக, கல்வி நிறுவனங்களை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அணுகி தங்களுக்கு தேவைப்படும் புத்தாக்க தீர்வு, தொழில்நுட்பங்களை வாங்கலாம். இதற்கான செலவில், 50 சதவீதம், அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் வரை அரசு வழங்கும். இந்தாண்டில் இதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதியுதவி பெற, விண்ணப்பிக்க க்யூ.ஆர்., கோட்

