தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சிறிய அளவில் உர பற்றாக்குறை விரைவில் தீர்வு காண அரசு உறுதி

 சிறிய அளவில் உர பற்றாக்குறை விரைவில் தீர்வு காண அரசு உறுதி

 சிறிய அளவில் உர பற்றாக்குறை விரைவில் தீர்வு காண அரசு உறுதி


ADDED : மே 20, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மூலப்பொருள் மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரித்தாலும், கரீப் பருவத்தில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உரத்துறை கூடுதல் செயலர் அபர்ணா சர்மா தெரிவித்ததாவது:

நடப்பாண்டின், கரீப் பருவத்துக்கு மொத்த உரத்தேவை 3.90 கோடி டன். இதில், 51 சதவீத உரம் கையிருப்பில் உள்ளது. சிறிய அளவிலான பற்றாக்குறை நிலவினாலும் விரைவில் அது தீர்க்கப்படும். நம் நாட்டில், தற்போது, தினசரி 80,000 டன் உரம் தயாராகிறது. மேற்காசிய போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 86.20 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில், 52.10 லட்சம் டன் யூரியா, 7 லட்சம் டன் டி.ஏ.பி., 17.30 லட்சம் டன் என்.பி.கே., மற்றும் 9.70 லட்சம் டன் எஸ்.எஸ்.பி., ஆகியவை அடங்கும்.

இது கடந்த ஆண்டை விட சற்று குறைவு. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், எல்.என்.ஜி., வாயு, உர மூலப்பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்தியா மாற்று இறக்குமதி வழிகளை தீவிரமாக தேடி வருகிறது. உலக சந்தையில் உரம் விலை உயர்ந்துள்ளதால், மத்திய அரசின் மானிய செலவு அதிகரித்து வருகிறது. எனினும், அது இந்திய விவசாயிகளை பாதிக்காது. விவசாயிகளுக்கு, 45 கிலோ யூரியா மூட்டை 266.50 ரூபாய்க்கும், 50 கிலோ டி.ஏ.பி., மூட்டை 1,350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us