வோடபோனை கையகப்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை: சிந்தியா
வோடபோனை கையகப்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை: சிந்தியா
ADDED : அக் 10, 2025 03:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியாவில், மத்திய அரசின் பங்கை அதிகரிக்க திட்டம் இல்லை என அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வோடபோன் ஐடியா நிறுவனத்தை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர உள்ளதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அந்நிறுவனத்தில் தன் பங்கை அதிகரித்து, பொதுத் துறை நிறுவனமாக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை.
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கட்டண பாக்கியை, பங்குகளாக மாற்றிக் கொண்டது, அதன் நிதிச்சுமையை குறைப்பதற்கான ஒரேமுறை எடுக்கப்பட்ட நடவடிக்கை. நிறுவனத்தை அரசின் கையில் கொண்டு வரும் நோக்கத்தில் அதை செய்யவில்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.