sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 தள்ளாடும் 'பேக்கேஜிங்' துறை அரசு கைகொடுக்க எதிர்பார்ப்பு

/

 தள்ளாடும் 'பேக்கேஜிங்' துறை அரசு கைகொடுக்க எதிர்பார்ப்பு

 தள்ளாடும் 'பேக்கேஜிங்' துறை அரசு கைகொடுக்க எதிர்பார்ப்பு

 தள்ளாடும் 'பேக்கேஜிங்' துறை அரசு கைகொடுக்க எதிர்பார்ப்பு


ADDED : ஜன 22, 2026 01:20 AM

Google News

ADDED : ஜன 22, 2026 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மற்ற தொழில்களை சார்ந்து இயங்கும் பேக்கேஜிங் துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு கரம் கொடுத்து உதவ தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்க தலைவர் தேவகுமார் கூறியதாவது:

பேக்கேஜிங் துறை சார்ந்து கோவையில், 250 நிறுவனங்கள் செயல்படுகின்றன. அனைத்துமே குறு, சிறு தொழில் நிறுவனங்கள்.

ஸ்ட்ராப்பிங், ராப்பிங், வேக்கம், சீலிங், அட்டைப்பெட்டி என, ஐந்து வகையான பேக்கிங் முறைகள் உள்ளன. இதில் 153 வகைகளில் பேக்கிங் செய்யப்படுகிறது. இதற்கானவற்றை பேக்கேஜிங் துறை உற்பத்தி செய்து தருகிறது. பேக்கேஜிங் இயந்திரங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்துறையில் நல்ல வளர்ச்சி இருந்தது.

அமெரிக்க வரிவிதிப்பால், திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதியை சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. எனவே, மத்திய, மாநில அரசுகள் மூலப்பொருள் வங்கியை உருவாக்கி, விலையில் நிலைத்தன்மை ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட தொழில் மையம் வாயிலான மானிய திட்டங்களின் காலம் 3 முதல் 5 ஆண்டுகளாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஏற்றுமதி சார்ந்த சிக்கல்களை களைய வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us