'ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ்' நிறுவன முதலீட்டை ஈர்க்க அரசு பேச்சு
'ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ்' நிறுவன முதலீட்டை ஈர்க்க அரசு பேச்சு
ADDED : நவ 11, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சர்வதேச நிறுவனமான, 'ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ்', எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும் புதுார் அருகில் தொழிற்சாலை உள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரேவதி அத்வைதி, நேற்று சந்தித்து பேசினார்.
தலைமை செயலர் முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கூடுதலாக முதலீடு செய்யுமாறு ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம், தொழில் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

