எம்.எஸ்.எம்.இ., சீர்திருத்தங்கள் டிசம்பரில் வெளியிடுகிறது அரசு
எம்.எஸ்.எம்.இ., சீர்திருத்தங்கள் டிசம்பரில் வெளியிடுகிறது அரசு
UPDATED : அக் 24, 2025 03:31 AM
ADDED : அக் 24, 2025 03:28 AM

புதுடில்லி: எம்.எஸ்.எம்.இ., துறையை வலுப்படுத்த மத்திய அரசு விரைவில் அடுத்தக்கட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]() |
நாட்டின் பொருளாதாரத்துக்கு, விவசாயத்திற்கு அடுத்தபடியாக எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை தான் அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு இத்துறை மிகவும் முக்கியமானது.
எனினும், இத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பல நிறுவனங்கள் இன்னும் முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன. திறமை வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது.
![]() |
இந்நிலையில், இதை சரிசெய்வதற்காக, மத்திய அரசு விரைவில் புதிய சீர்திருத்த திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துகளைக் கேட்டறிய, மூன்று கட்டங்களாக அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
முதற்கட்டமாக கிளஸ்டர் அளவிலான பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன. மண்டல அளவிலான மாநாடுகள் வரும் நவம்பர் மாதம் துவங்கி, ஏழு நகரங்களில் நடைபெற உள்ளன. தேசிய அளவிலான மாநாடு நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
நிதி மற்றும் மூலப்பொருட்களின் செலவைக் குறைப்பது; போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் கண்டுபிடிப்பு திறனை அதிகரிப்பது தொடர்பாக தொழில் துறையினரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த சீர்திருத்த திட்டங்களின் இறுதி தொகுப்பு, வரும் டிசம்பர் மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பரில் துவங்கி முக்கிய நகரங்களில் பயிலரங்குகள், மாநாடுகள் டிசம்பரில் தேசிய அளவிலான எம்.எஸ்.எம்.இ., மாநாடு நிதி, மூலப்பொருள் செலவை குறைத்தல், கண்டுபிடிப்பு திறன் அதிகரிப்புக்கு முக்கியத்துவம்


