ADDED : ஜூன் 22, 2025 08:07 PM

பங்கு சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கை மீறி, வரும் மாதங்களில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொது பங்குகளை வெளியிட தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக முதன்மை சந்தை மந்தமாக இருந்த நிலையில், பொது பங்கு வெளியீட்டிற்கு பல்வேறு நிறுவனங்கள் தயாராகி வருவது, கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், 10 நிறுவனங்கள் பொது பங்குகளை வெளியிட்டன.
பின்னர் மார்ச் மாதம் ஒரு பொது பங்கு கூட வெளியாகவில்லை. ஏப்ரல் மாதம் மின் வாகன நிறுவனம் ஏத்தர் எனர்ஜி சந்தையில் நுழைந்து, பங்குகளை வெளியிட்டது. இந்நிலையில், வரும் மாதங்களில் பங்குகளை வெளியிட அனுமதி கோரி 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காத்திருப்பதாக, பங்கு சந்தை ஆய்வு நிறுவனம் பிரைம் டேட்டாபேஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
பங்குகளை வெளியிட காத்திருக்கும் நிறுவனங்கள் பட்டியலில், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யு., சிமென்ட், வெரிடா பைனான்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.