தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஜூனில் 8 துறைகள் வளர்ச்சி சரிவு

ஜூனில் 8 துறைகள் வளர்ச்சி சரிவு

ஜூனில் 8 துறைகள் வளர்ச்சி சரிவு


ADDED : ஜூலை 21, 2025 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி :முக்கிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில் 1.70 சதவீதமாக சரிந்துள்ளதாக, மத்திய அரசு தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 6.90 சதவீதமாகவும்; கடந்த மே மாதத்தில் 1.20 சதவீதமாகவும் இருந்தது.

எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். இதில் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், ஸ்டீல், சிமென்ட் ஆகிய துறைகள் மட்டுமே கடந்த மாதம் வளர்ச்சி கண்டுள்ளன. மற்ற ஐந்து துறைகளின் வளர்ச்சியும் மைனஸ் நிலையில் இருந்தது.

நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதம் வரையிலான முதல் மூன்று மாதங்களில், எட்டு முக்கிய துறைகளின் சராசரி வளர்ச்சி 1.30 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 6.20 சதவீதமாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us