தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஜூலையில் முக்கிய துறைகள் வளர்ச்சி சரிவு

ஜூலையில் முக்கிய துறைகள் வளர்ச்சி சரிவு

ஜூலையில் முக்கிய துறைகள் வளர்ச்சி சரிவு


ADDED : ஆக 20, 2025 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 11:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:முக்கிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் இரண்டு சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய அரசு தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி, கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 6.30 சதவீதமாகவும்; கடந்த ஜூன் மாதத்தில் 2.20 சதவீதமாகவும் இருந்தது.

எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும்.

எரிசக்தி சார்ந்த துறைகளின் வளர்ச்சி சரிந்த போதிலும், கட்டுமானம் தொடர்பான துறைகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

நிலக்கரி துறை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 12.30 சதவீதம் சரிந்துள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு துறைகளின் வளர்ச்சியும் சரிவு கண்டு ள்ளது. அதே நேரத்தில் ஸ்டீல் உற்பத்தி 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு 12.80 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சிமென்ட் உற்பத்தியும் 11.70 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரையிலான காலத்தில், எட்டு முக்கிய துறைகளின் சராசரி வளர்ச்சி 1.60 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 6.30 சதவீதமாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us