'ஜி.எஸ்.டி., குறைப்பால் பணவீக்கம் 0.35% குறையும்'
'ஜி.எஸ்.டி., குறைப்பால் பணவீக்கம் 0.35% குறையும்'
ADDED : டிச 14, 2025 01:04 AM

புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., குறைப்பின் தாக்கத்தால், நடப்பு நிதியாண்டில் சில்லரை விலை பணவீக்கம் 35 அடிப்படை புள்ளிகள் குறையும்' என எஸ்.பி.ஐ., ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த அக்டோபரில் 0.25 சதவீதமாக பதிவான நிலையில், நவம்பரில் சற்று அதிகரித்து 0.71 சதவீதமாக பதிவாகி உள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்து வரும் சூழலில், தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி காரணமாக இந்தியாவில் பணவீக்கம் மேலும் அதிகரிக்க கூடும்.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 1.80 சதவீதமாகவும், 2026 -- 27ம் நிதியாண்டில் 3.40 சதவீதமாகவும் இருக்கும்.
வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தில், தற்போதைய ரெப்போ வட்டி விகிதத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

