ADDED : ஜன 24, 2025 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த 2017 - 18ம் நிதியாண்டு முதல் 2022 -23ம் நிதியாண்டு வரை, காலம் கடந்து செய்யப்பட்ட ஜி.எஸ்.டி., தாக்கல்களுக்கு தாமத கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகையைப் பெற விரும்புவோர் வரும் மார்ச் 31ம் தேதிக்கு முன்னதாக ரீகன்சிலியேசன் ஸ்டேட்மென்ட் எனும் சமரச அறிக்கையின் படிவம் ஜி.எஸ்.டி.ஆர்., 9சி-ஐ தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பரிசீலித்து, தாமத கட்டணம் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே செலுத்தப்பட்ட தாமத கட்டணங்களுக்குத் ரீபண்டு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

