ADDED : ஆக 17, 2025 12:16 AM

புதுடில்லி: ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.50 சதவீதமாக குறைத்துள்ள போதிலும், புதிய வாடிக் கையாளர்களுக்கான வீட்டுக் கடன் வட்டியை, எஸ்.பி.ஐ., 25 அடிப்படை புள்ளிகள், அதாவது 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
எஸ்.பி.ஐ., வீட்டுக் கடனுக்கான வட்டி வரம்பு குறைந்தபட்சமாக 7.50 சதவீதத்திலிருந்து அதிகபட்சமாக 8.45 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், தற்போது அதிகபட்ச வரம்பை 8.70 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக, சிபில் ஸ்கோர் குறைவாக உள்ள வாடிக்கையாளர்கள், அதிக வட்டி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறைந்தபட்ச வட்டி வரம்பு 7.50 சதவீதமாகவே தொடர்கிறது.
யூனியன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் 7.35 சதவீதம் முதல் 10.10 சதவீதம் வரை வீட்டுக் கடன் வட்டி வசூலிக்கின்றன. தற்போது எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், பிற பொதுத்துறை வங்கிகளும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாபத்தை தக்கவைக்கவும், போட்டித்தன்மையை சமாளிக்கவும், பொதுத்துறை வங்கிகள் கடன் வட்டியை உயர்த்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
25 அடிப்படை புள்ளிகள், அதாவது 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது