உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 20, 2026 03:29 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: தமிழகம் மற்றும் ஒடிஷாவில் பிரம்மாண்ட நீர் மின் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த என்.எல்.சி., திட்டமிட்டுள்ளது.
அந்நிறுவனம், தனது கிளை நிறுவனமான 'என்.எ ல்.சி.ஐ.எல் ரினியூவபல்ஸ்' வாயிலாக தூய்மையான பசுமை ஆற்றல் திட்டங்களை மேம்படுத்தி வருகிறது.
தற்போது 1,800 மெகாவாட்டாக உள்ள புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை 2030க்குள் 10,00 0 மெகாவாட்டுக்கு மேல் உயர்த்தவும், 2047-க்குள் 32,700 மெகாவாட்டாக அதிக ரிக்கவும் என்.எல்.சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
நெய்வேலியில் 4 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி வாயிலான 'கிரீன் ஹைட்ரஜன்' உற்பத்தி மையத்தை முன்னோடி திட்டத்தை அமைப்பதுடன், அதிநவீன கார்பன் சேமிப்பு மு றைகளை உருவாக்க சென்னை ஐ.ஐ.டி உடன் என்.எல்.சி., கைகோர்த்து உள்ளது.
