ADDED : மே 06, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் 29 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதுவரை உள்நாட்டில் 1.27 கோடி கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் இருந்து 37 லட்சம் கார்களை, 150க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது.
இந்நிறுவனம் இந்தியாவில், 1996ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அன்றில் இருந்து இன்று வரை, 50,650 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் முதல் உற்பத்தி ஆலை, சென்னையில் துவங்கப்பட்டது. இது, 1998 முதல் செயல்பாட்டில் உள்ளது. இதை நவீனப்படுத்த, அண்மையில், 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இரண்டாம் ஆலை, மஹாராஷ்டிராவின் தலேகான் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள், இது செயல்பாட்டுக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.