ADDED : மே 10, 2026 12:25 AM

சென்னை: ஹூண்டாய் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், இதுவரை காணாத அளவில், 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு, எஸ்.யூ.வி., அணிவகுப்பை வலுப்படுத்தி, மின்சார வாகன பிரிவில் வளர்ச்சி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், சென்னை மற்றும் புனேவில் இரண்டு உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது. புனே ஆலையில், ஆண்டுக்கு 1.50 லட்சம் கார்களை கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மொத்த உற்பத்தி திறன், ஆண்டுக்கு 9.94 லட்சம் கார்களில் இருந்து, 11.44 லட்சம் கார்களாக அதிகரிக்கிறது.
குறிப்பாக, எஸ்.யூ.வி., மற்றும் மின்சார கார்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில், 68 சதவீதம் எஸ்.யூ.வி., கார்கள் ஆகும்.
நடப்பாண்டில் ஒரு எரிவாயு மற்றும் மின்சார காரை அறிமுகம் செய்ய உள்ளது. இதர கார்கள் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
