தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ குழாய் வழி எரிவாயு இணைப்பு இருந்தால் எல்.பி.ஜி., கிடையாது

 குழாய் வழி எரிவாயு இணைப்பு இருந்தால் எல்.பி.ஜி., கிடையாது

 குழாய் வழி எரிவாயு இணைப்பு இருந்தால் எல்.பி.ஜி., கிடையாது


ADDED : மார் 16, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள், சமையல் காஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கவோ அல்லது புதிதாக இணைப்பை பெறவோ மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, குழாய் வழி இணைப்பு உள்ளவர்கள் தங்களது சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

குழாய் வழி இணைப்பு பெற்றவர்களுக்கு, அரசு எண்ணெய் நிறுவனங்கள் அல்லது வினியோகஸ்தர்கள், புதிதாக எல்.பி.ஜி., இணைப்பை வழங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள இணைப்பின் அடிப்படையில் 'ரீபிள்' செய்யவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. குழாய் வழி எரிவாயு வசதி இல்லாத வீடுகளுக்கு, காஸ் சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us