ADDED : அக் 10, 2024 01:29 AM

புதுடில்லி:வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இந்தியாவில் இறக்குமதி செய்யும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.,செலுத்துவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு, அமலுக்கு வந்துள்ளது.
டில்லியில் கடந்த செப்.,12ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், வெளிநாட்டு விமான நிறுவனங்கள், தன் தலைமை அலுவலகத்தில் இருந்து இந்தியாவில் உள்ள கிளைகளுக்கு இறக்குமதி செய்யும் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல், அரசு மற்றும் தனியாரிடமிருந்து பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் பெறும் நிதிக்கு, ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்கப்பட்டது. இவைஇரண்டும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்டில், மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம், 'பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுாப்தான்ஸா, எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' உள்ளிட்ட 10 வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இறக்குமதி செய்யப்பட்ட சேவைகளுக்கு 10,000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்தவில்லை என, நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

