தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ அக்., 1 முதல் அமலாகும் வருமான வரி மாற்றங்கள்

அக்., 1 முதல் அமலாகும் வருமான வரி மாற்றங்கள்

அக்., 1 முதல் அமலாகும் வருமான வரி மாற்றங்கள்


ADDED : செப் 27, 2024 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 01:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆதார் பங்கு பரிமாற்ற வரி உட்பட கடந்த மத்திய ப்டஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரித்துறை சார்ந்த ஆறு மாற்றங்ள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.


1. எப் அண்டு ஓ., எனப்படும் பங்கு வர்த்தகப் பிரிவில், பங்கு பரிவர்த்தனை வரியான எஸ்.டி.டி., 0.02 மற்றும் 0.1 சதவீதமாக உயர்த்தப்பட்டது
2. பான் கார்டு விண்ணப்பம், வருமான கணக்கு தாக்கல் படிவம் ஆகியவற்றில் ஆதார் எண்ணுக்கு மாற்றாக, ஆதார் பதிவு அடையாள எண்ணை குறிப்பிட வழங்கப்பட்ட அனுமதி நீக்கப்படுகிறது. போலியாக, தவறாக பான் கார்டு பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இது அறிவிக்கப்பட்டுள்ளது
3. டிவிடெண்டு போலவே, பை - பேக் முறையில் வாங்கப்படும் பங்குகளுக்கு, நிறுவனங்களுக்கு பதிலாக முதலீட்டாளர்களின் வருவாய் மீது வரி விதிக்கப்படும்
4. மாறும் வட்டி உட்பட மத்திய, மாநில அரசு பத்திரங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு, 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும். முதலீட்டின் மீது ஆண்டுக்கு ரூ.10,000 வரை வருமானத்துக்கு வரிப்பிடித்தம் இல்லை
5. காப்பீடு, லாட்டரி, தரகு, மின்னணு வர்த்தகம் உட்பட சிலவற்றுக்கு, டி.டி.எஸ்., எனப்படும் வரிப் பிடித்தம் குறித்த பட்ஜெட் அறிவிப்பும் அமலுக்கு வரவுள்ளது. இதில், மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான வரிப்பிடித்தம், 1 சதவீதத்தில் இருந்து, 0.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது
6. வரி பாக்கி தொடர்பான வழக்குகள், தாவாக்களை தீர்த்துக் கொள்வதற்கான, 'விவாத் சே விஸ்வாஸ்' திட்டம், அக்., 1 முதல் டிச., 31 வரை செயல்படுத்தப்பட உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us