ADDED : ஜன 29, 2026 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியாவே அதிக பலனடையும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜமைசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்திக்கு அதிபர் டிரம்ப் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால்தான் வெளிநாடுகளிலிருந்து வரும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. அதிக வரியால் பாதிக்கப்படும் நாடுகள் புதிய வர்த்தக இடங்களை கண்டறிகின்றன. ஐரோப்பிய யூனியன் வர்த்தகத்தை சார்ந்துள்ள அமைப்பு. அமெரிக்காவுக்கு பொருள்களை அனுப்ப முடியாத சூழலில், இந்தியாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவே அதிக பலனடையும்” என்றார்.

