ADDED : செப் 08, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி :இந்தியாவும் இஸ்ரேலும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உ ள்ளது.
இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதியமைச்சகம், 'இரு நாடுகளின் அரசு சார்பில், டில்லியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது' என தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இஸ்ரேல் நிதியமைச்சர் பெச லெல் ஸ்மோட்ரிச் இந்த ஒப்பந் தத் தில் கையெழுத்திட்ட னர்.
கடந்த 2000ம் ஆண்டிலிருந்து நடப்பாண்டு ஜூன் மாதம் வரை, இந்தியா 2,973 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகளை இஸ்ரேலில் இருந்து பெற்றுள்ளது.