தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவனங்களுக்கான ஏ.ஐ., இரண்டாம் இடத்தில் இந்தியா

 நிறுவனங்களுக்கான ஏ.ஐ., இரண்டாம் இடத்தில் இந்தியா

 நிறுவனங்களுக்கான ஏ.ஐ., இரண்டாம் இடத்தில் இந்தியா


ADDED : பிப் 11, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'என்டர்பிரைஸ்' ஏ.ஐ., எனும் நிறுவனங்களுக்கான ஏ.ஐ., பயன்பாட்டில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக, 'ஜீஸ்கேலர்' நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டர்பிரைஸ் ஏ.ஐ., என்பது, நிறுவனங்களின் தேவைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் ஒரு தொழில்நுட்ப பிரிவாகும். இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங் கப்படும் ஏ.ஐ.,யை காட்டிலும் வித்தியாசமா னது.

இந்நிலையில், இந்த வகை ஏ.ஐ., பயன்பாடு குறித்து, 'ஜீஸ்கேலர் திரெட்லேப்ஸ் 2026 ஏ.ஐ., செக்யூரிட்டி ரிப்போர்ட்' என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கடந்தாண்டு ஜூன் - டிச., இடையே, ஆசிய - பசிபிக் மண்டலத்தில் நடைபெற்ற மொத்த ஏ.ஐ., செயல்பாடுகளில் 46 சதவீதம், அதாவது, கிட்டத்தட்ட 8,230 கோடி பரிவர்த்தனைகள் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் நிதி சேவைகள் துறைகளே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனினும், இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு இணையான பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லை என அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 'ஏஜென்டிக் ஏ.ஐ.,' எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பற்ற பயன்பாட்டால், நிறுவனங்களின் முக்கிய தரவுகள் மற்றும் ரகசியங்கள் எளிதில் திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us