அமெரிக்க எல்.பி.ஜி., இறக்குமதி முதல்முறையாக இந்தியா ஒப்பந்தம்
அமெரிக்க எல்.பி.ஜி., இறக்குமதி முதல்முறையாக இந்தியா ஒப்பந்தம்
ADDED : நவ 17, 2025 11:43 PM

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி., இறக்குமதி செய்ய முதல்முறையாக இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இதை நேற்று அறிவித்தார். ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி., இறக்குமதி செய்ய நாட்டின் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது இந்தியாவின் மொத்த எல்.பி.ஜி., இறக்குமதியில் 10 சதவீதமாகும்.
ஓர் ஆண்டுக்கு கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், அடுத்தாண்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எல்.பி.ஜி., இறக்குமதியாளராக விளங்கும் இந்தியா, தன் தேவையில் 50 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது.
பாரம்பரியமாக எல்.பி.ஜி., இறக்குமதிக்கு மேற்காசிய நாடுகளையே சார்ந்திருக்கும் நம் நாடு, வாங்கும் சந்தையை பல்வகைப்படுத்தும் நோக்கில் இந்த மு டிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், “நம் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் எல்.பி.ஜி., வழங்க, இறக்குமதி சந்தைகள் தொடர்ந்து பல்வகைப் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா, அமெரிக்கா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
இந்திய எண்ணெய் நிறுவனங்களைப் பொறுத்தவரை, வினியோக தொடர் ஆபத்துகளை குறைப்பதோடு, விலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இது உதவும்.

