தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வெள்ளி இறக்குமதி இந்தியா முதலிடம்

 வெள்ளி இறக்குமதி இந்தியா முதலிடம்

 வெள்ளி இறக்குமதி இந்தியா முதலிடம்


ADDED : ஜன 08, 2026 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 01:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கடந்தாண்டு, சர்வதேச அளவில் வெள்ளி இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஜி.டி.ஆர்.ஐ., ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்தாண்டு இந்தியா கிட்டத்தட்ட 82,800 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளியை இறக்குமதி செய்து, சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் அதிகம்.

இந்தியாவில் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு துவக்கத்தில் ஒரு கிலோ வெள்ளி 80,000 ரூபாய் என்றிருந்த நிலையில், தற்போது 2.50 லட்சத்தை தாண்டியுள்ளது.

புவிசார் அரசியலில் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பான முதலீடு என்ற காரணத்தால் மட்டுமே விலை உயரவில்லை. வெள்ளிக்கான தேவையில் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி இப்போது வெறும் ஆபரண பொருளாக மட்டுமின்றி, ஒரு முக்கிய தொழில்துறை மூலப்பொருளாகவும் மாறியுள்ளது.

சுத்திகரிப்பில் சீனா வெள்ளி சுத்திகரிப்பில் சீனா உலகளவில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்தில், வெள்ளி ஏற்றுமதிக்கு அந்நாடு உரிம அடிப்படையிலான புதிய கட்டுப்பாடுகளை விதித்திருப்பது, உலக சந்தையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

சுரங்க உற்பத்தி மந்தமடைந்துள்ள நிலையில், ஆண்டுதோறும் 20 - 25 கோடி அவுன்ஸ் வெள்ளிக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு அவுன்ஸ் என்பது கிட்டத்தட்ட 28.35 கிராம்.

வெள்ளியை வெறும் விலையுயர்ந்த உலோகம் என்று பார்க்காமல், நாட்டின் எரிசக்தி மாற்றத்துக்கான முக்கிய உலோகமாக அரசு அங்கீகரிக்க வேண்டும்.

வெளிநாட்டு சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்தல் மற்றும் உள்நாட்டிலேயே மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு திறனை அதிகரித்தால், இறக்குமதியை குறைக்க முடியும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us