இன்று அமலுக்கு வருகிறது இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம்
இன்று அமலுக்கு வருகிறது இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம்
UPDATED : ஜூலை 15, 2026 04:36 AM
ADDED : ஜூலை 15, 2026 02:37 AM

புதுடில்லி: இந்தியா - பிரிட்டன் இடையே கடந்த ஆண்டு கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் வாயிலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சக அறிக்கை: இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம், பல கட்ட பேச்சுக்கு பிறகு கடந்த 2025 ஜூலை 25 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் பல்வேறு பொருட்கள் மீது சுங்க வரியை படிப்படியாக குறைக்க அல்லது நீக்க ஒப்புக் கொண்டுள்ளன.
இதனால், இந்தியாவில் இருந்து ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துகள், நகைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். புதிய முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்கும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
