தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/இந்திய எல்.பி.ஜி., இறக்குமதியில் முதலிடம் பிடித்தது யு.ஏ.இ.,

இந்திய எல்.பி.ஜி., இறக்குமதியில் முதலிடம் பிடித்தது யு.ஏ.இ.,

இந்திய எல்.பி.ஜி., இறக்குமதியில் முதலிடம் பிடித்தது யு.ஏ.இ.,


UPDATED : அக் 11, 2026 12:00 AM

ADDED : அக் 10, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 12:00 AM ADDED : அக் 10, 2026 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் கடந்த செப்., மாத எல்.பி.ஜி., இறக்குமதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் இருந்து வினியோகம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி., இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளதாக கடல்சார் வர்த்தக தரவு நிறுவனமான கெப்ளர் தெரிவித்துள்ளது.

மேலும் அது தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் எல்.பி.ஜி., இறக்குமதியில், கடந்த ஆறு மாதங்களாக முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. செப்., மாதத்தில், நம் நாட்டின் மொத்த எல்.பி.ஜி., இறக்குமதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பங்கு 39 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஆக., மாதத்தில் 13 சதவீதமாக இருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து செப்., மாதத்தில் 5.47 லட்சம் டன் எல்.பி.ஜி., இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆக., மாதத்தில் இது 1.93 லட்சம் டன்னாக இருந்தது. இதன் வாயிலாக இறக்குமதி கிட்டதட்ட 182 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட எல்.பி.ஜி., ஏற்றுமதி 58 சதவீதம் சரிந்து, 3.23 லட்சம் டன் ஆனது.

இறக்குமதி (செப்., 2026)

நாடு : அளவு (டன்) : : ஆக., ஓப்பீடு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : 5,47,000 : 182%( அதிகரிப்பு)

அமெரிக்கா : 3,23,000 : 58% (சரிவு)

குவைத் : 1,32,544 : 15.6% (அதிகரிப்பு)

கத்தார் : 1,15,340 : 76% (அதிகரிப்பு)

ஈரான் : 89,000 : தகவல் இல்லை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us