செப்., 11 - 13ல் மொரீஷியஸில் இந்திய வம்சாவளியினர் மாநாடு
செப்., 11 - 13ல் மொரீஷியஸில் இந்திய வம்சாவளியினர் மாநாடு
ADDED : ஜூன் 16, 2026 07:48 AM

சென்னை: இந்திய வம்சாவளியினருக்கான சர்வதேச அமைப்பு, மொரீஷியஸில் செப்., 11 - 13ம் தேதிகளில் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தொழில் துறையினர் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து, அவ்வமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செழியன் கூறுகையில், ''ஆண்டுதோறும் உலக தமிழ் அமைப்புடன் இணைந்து, ஒவ்வொரு நாட்டிலும் சர்வதேச மாநாட்டை நடத்துகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதும், தமிழகம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த தொழில் துறையினர் வெளிநாடுகளில் தொழில் தொடங்கவும் இம்மாநாடு உதவும்.
''தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். பரந்துாரில் விமான நிலையத்தை 2,000 ஏக்கர் பரப்பில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் வேளாண் கருவிகள் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்ய, வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்,'' என்றார்.
