ரஷ்யாவில் மருந்து தயாரிப்பு இந்திய நிறுவனங்கள் ஆர்வம்
ரஷ்யாவில் மருந்து தயாரிப்பு இந்திய நிறுவனங்கள் ஆர்வம்
ADDED : அக் 18, 2025 01:51 AM

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள பல்வேறு மாகாணங் களில் மருந்து தயாரிப்பு ஆலை அமைக்க, இந்திய மருந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
ரஷ்யாவுக்கு ஜென்ரிக் மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா ஏற்கனவே முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அமைச்சரும், வெளியுறவு பொருளாதாரம் மற்றும் சர்வதேச தொடர்பு துறை தலைவருமான செர்ஜி செரமின் தெரிவித்துள்ளதாவது:
ரஷ்ய மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் ஆலை அமைப்பது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தி வருகிறது.
இதே போன்று, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ரஷ்யாவில் பல்வேறு மாகாணங்களில் ஆலைகள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. விரைவில், தொழில் அமைப்புகளின் பார்வை, ரஷ்ய சந்தையை நோக்கி திரும்பும் என நம்பிக்கை உள்ளது.
சமீபத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பொறியியல் நிறுவனம், இந்தியாவில் 120 நவீன ரயில்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இது ஆசிய சந்தைகளில், ரஷ்ய நிறுவனம் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.