உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 01, 2026 01:30 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: இண்டிகோ விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வில்லி வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான வால்ஷ், தற்போது சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான 'அயேட்டா'வின் பொது இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் ஜூலை 31ல் முடிவடைகிறது.
எனவே, ஆக.,3 க்குள் சி.இ.ஓ., பதவியை அவர் ஏற்க இருப்பதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ.,வான பீட்டர் எல்பெர்ஸ் திடீரென பதவி விலகிய நிலையில், மூன்று வாரத்துக்குள் வால்ஷ் அந்த பதவியில் நியமிக்கப்படும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
