தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ தொழில்துறை உற்பத்தி 7.30% ஆக அதிகரிப்பு

 தொழில்துறை உற்பத்தி 7.30% ஆக அதிகரிப்பு

 தொழில்துறை உற்பத்தி 7.30% ஆக அதிகரிப்பு


ADDED : ஜூலை 29, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தில் 7.30 சதவீதமாக உயர்ந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தயாரிப்பு துறை உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய மொத்த விலை குறியீட்டு முறைக்கு பதிலாக, புதிய தயாரிப்பாளர் விலை குறியீட்டு முறையின் உதவியுடன் தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் 5.10 சதவீதமாக இருந்த நி லையில், ஜூன் மாதத்தில் 7.30 சத வீதமாக உயர்ந்துள்ளது.

தயாரிப்பு துறையில் 7.80 சதவீத வளர்ச்சியும், மின்சாரம் மற்றும் எரிவாயு வினியோக துறையில் 10.60 சதவீத வளர்ச்சியும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தயாரிப்பு துறையிலுள்ள 23 தொழில் பிரிவுகளில், 19 பிரிவுகள் நேர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

மின் சாதனங்கள் தயாரிப்பு 34 சதவீதம், வாகனங்கள் தயாரிப்பு கிட்டத்தட்ட 17.50 சதவீதம் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு 10.80 சதவீதம் என வளர்ச்சியில் பங்களித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us