தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஓசூரில் 26ம் தேதி தொழில், வணிக சங்கமம் நிகழ்ச்சி

 ஓசூரில் 26ம் தேதி தொழில், வணிக சங்கமம் நிகழ்ச்சி

 ஓசூரில் 26ம் தேதி தொழில், வணிக சங்கமம் நிகழ்ச்சி


ADDED : செப் 24, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 07:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூரில் 26ல் தொழில், வணிக சங்கமம்



கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஹோட்டலில், வரும், 26ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, 'தி ரைஸ் ஓசூர்' என்ற அமைப்பு சார்பில், 'தொழில் மற்றும் வணிக சங்கமம்' என்ற தொழில் முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள், வணிகர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி, தங்களது தொழிலை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் செப்., 26ல் தொழில் கண்காட்சி



ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில், ஈடிசியா (மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்) சார்பில், தொழில் வர்த்தக கண்காட்சி வரும், 26 முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து, ஈடிசியா கூட்டரங்கு கண்காட்சி தலைவர் சரவணன் கூறுகையில், ''ஈடிசியா ஐ டெக்-2026' என்ற தலைப்பில் கண்காட்சி வரும் 28 வரை நடக்கிறது. இதில், 160 அரங்குகளில் பல்வேறு பகுதிகளை சார்ந்த தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கின்றன,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us