தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ரூ.17 லட்சம் கோடிக்கு கட்டமைப்பு திட்டங்கள்

 ரூ.17 லட்சம் கோடிக்கு கட்டமைப்பு திட்டங்கள்

 ரூ.17 லட்சம் கோடிக்கு கட்டமைப்பு திட்டங்கள்


ADDED : ஜன 08, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் மொத்தம் 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 852 திட்டங்களை செயல்படுத்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்கள் தொடர்பான அட்டவணையை நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மத்திய அமைச்சகங்கள் சார்பில் 13.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 232 திட்டங்களும், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 3.84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 620 திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் இத்திட்டங்களில், மாநிலங்களை பொறுத்தவரை, ஆந்திரா 270 திட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 70 திட்டங்களுடன் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அமைச்சகம்/துறை திட்டங்களின் எண்ணிக்கை மதிப்பீடு (ரூ. கோடியில்) நெடுஞ்சாலை 108 8,76,000 மின்சாரம் 46 3,40,000 ரயில்வே 13 30,904 நீர் வளம் 29 12,254 பெட்ரோலியம் 1 8,743 தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை 2 6,646 சிவில் விமானப் போக்குவரத்து 11 2,262 பிற 22 38,191 மொத்தம் 232 13,15,000



தமிழகம் 2ம் இடம் மாநிலங்கள் திட்டங்களின் எண்ணிக்கை மதிப்பீடு (ரூ. கோடியில்) ஆந்திரா 270 1,16,000 தமிழகம் 70 87,640 மத்திய பிரதேசம் 21 65,496 ஜம்மு அண்டு காஷ்மீர் 57 21,374



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us